நெல்லை: தமிழக அரசுப் பேருந்து ஓட்டையில் இருந்து பெண் ஒருவர் விழுந்து உயிர் பிழைத்த சம்பவம் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்து மிகவும் மோசமான நிலையில் இயக்கப்பட்டு வருகிறது. குடைக்குள் மழை போல் பஸ்ஸுக்குள் மழை, பெருச்சாளி நுழையும் அளவிற்கான ஓட்டையிலிருந்து, பயணிகளே விழும் அளவிற்கான ஓட்டைகள் வரை எல்லோரையும் பயத்தில் ஆழ்த்தி வருகின்றது.
இந்நிலையில் அரசுப் பேருந்து ஒன்று கேரளாவில் இருந்து தென்காசிக்கு வந்துள்ளது. அப்போது அந்தப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக இளம்பெண் ஒருவர் கீழே விழுந்துள்ளார். இதனைப் பார்த்து சாலையோரத்தில் நடந்து சென்றவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக அந்த பெண்ணுக்கு முதலுதவி செய்தனர். இது தொடர்பாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பேருந்தில் இருந்து கீழே விழுந்த அந்த பெண் ராஜபாளையத்தை சேர்ந்த ஸ்வாதி என்று தெரியவந்தது. இதனையடுத்து கூடுதல் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment