பி.எஸ்.என்.எல் தனது இணையதள வேகத்தை 4 மடங்கு அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது.
தற்போது பி.எஸ்.என்.எல் தனது இணையதள சேவையை 512 கே.பி.பி.எஸ். என்ற வேகத்தில் தருகிறது. ஆனால் இந்த வேகம் போதவில்லை என்று அதன் வாடிக்கையாளர்கள் நெடுநாட்களாக கூறி வருகின்றனர். மேலும் நிறைய பேர் பி.எஸ்.என்.எல் சேவையை துண்டித்துவிட்டு வேறு தனியார் இணையதள சேவைக்கு மாறிவிட்டனர். மொபைல் மற்றும் தரைவழி தொலைபோசி ஆகிய இரண்டு இணப்புகளிலும் இதன் இணையதள சேவையின் வேகம் குறைவக இருப்பதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 2014 முதல் மார்ச் 2015 வரை 1.78 கோடி செல்போன் வாடிக்கையாளர்களையும் 20 லட்சம் தொலைபேசி வாடிக்கையாளர்களையும் பி.எஸ்.என்.எல். இழந்துள்ளது. இதனால் 7,600 கோடி இந்நிறுவனத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் துறைகளுக்கு ஈடு கொடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் தற்போது அதன் வேகத்தை, வருகிற அக்டோபர் 1 முதல், நொடிக்கு 2 எம்.பி வேகத்தில் அளிக்கப்போகிறது. அதாவது தனது வேகத்தை 4 மடங்கு அதிகரிக்கிறது. இதன் மூலம் இழந்த மற்றும் புதிய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என பி.எஸ்.என்.எல் நம்புகிறது.
பி.எஸ்.என்.எல்-ன் இந்த அறிவிப்பால் மற்ற தனியார் நிறுவனங்களும் குறைந்த கட்டணத்தில் வேகமான இணையதள சேவையை வழங்க முன்வரலாம் எனத்தெரிகிறது.


No comments:
Post a Comment