புதுக்கோட்டை : இந்திராகாந்தி. ராஜீவ்காந்தி உள்ளிட்ட தலைவர்களின் தபால் தலைகளை இனி வெளியிடாது என்ற மத்திய அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரசின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், மத்திய அரசைக் கண்டித்து, வரும் 18 -ஆம் தேதி தமிழகத்தில அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் உள்ள தபால்நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது...
மத்திய அரசு இந்திரா காந்தி ராஜீவ் காந்தி உள்ளிட்டோரின் தபால் தலைகள் இனி வெளியிடப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது கண்டிக்கதக்கது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 18 -ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.. காவிரி மேலாண்மை வாரிய குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக தலைமைச் செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு இந்த விஷயத்தில் கடிதம் எழுதி கொண்டிருந்தால் மட்டும் பிரச்னைக்கு தீரவு கிடைக்காது. உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அனைத்துக் கட்சி பிரநிதிகளுடன் பிரதமரை சந்திக்க முயற்சி செய்ய வேண்டும். இலங்கை தமிழர் பிரச்னையாக இருந்தாலும் சரி மீனவர்கள் பிரச்னையாக இருந்தாலும் சரி ராஜீவ்காந்தி ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தரத்தீர்வு காண முடியும். இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
No comments:
Post a Comment