இந்தியாவின் புகழ்பெற்ற மறைந்த ஓவியர் மக்ஃபுல் பிடா ஹூசைனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரது புகைப்படத்தை கூகுல் டூடுலாக வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.
கூகுள் இணையதளம், தனது முகப்பு பக்கத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக வடிவமைப்பது வழக்கம். மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் காலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூகுள் கருப்பு நிற ரிப்பன் ஒன்றை முகப்பு பக்கத்தில் வெளியிட்டிருந்தது.
அந்தவகையில் இந்தியாவின் புகழ்பெற்ற மறைந்த ஓவியர் மக்ஃபுல் பிடா ஹூசைனின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், அவரது புகைப்படத்தை டூடுல் ஆக கூகுள் வெளியிட்டுள்ளது.
இந்த டூடுலை கிளிக் செய்தால் அவர் குறித்த தகவல்களை பெறலாம்.ஓவியர், புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட ஹூசைன் உடல் நலக்குறைவால் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி தனது 95 ஆம் வயதில் உயிரிழந்தார்.
இந்தியாவின் பிக்காஷோ என்று அழைக்கப்படும் ஹூசைனை கவுரவப்படுத்தும் விதமாக அவருக்கு 1961 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment