நாட்டின் 69வது சுதந்திர தினத்தையொட்டி, அதற்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு தனிப் பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளார்
லதா ரஜினிகாந்த்.
கல்வி, சமூக சேவை, தேச ஒருமைப்பாடு போன்றவற்றில் அக்கறை காட்டி வரும் லதா ரஜினிகாந்த், ஐ யாம் பார் இந்தியா என்ற இயக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தார்.
நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில் தேசத் தலைவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் விதமாகவும், இளைஞர்களை உத்வேகப்படுத்தும் முகமாகவும் ஒரு புதிய பாடலை எழுதி, இசையமைத்து, பாடி வெளியிட்டுள்ளார் லதா ரஜினிகாந்த். பாரதம் உன்னைத் தேடுது... ஒரு உண்மைப் பிள்ளை உன்னைத் தேடுது பாரதம் உன்னை நாடுது ஒரு உண்மை உறவை உன்னிடம் நாடுது எழுந்து நில் உறவைச் சொல் பாரத மாதாவை நீ அணைத்துக் கொள் புறப்படு உன் சேவை தாய் நாட்டுக்கு என்றும் தேவை ... என்று ஆரம்பிக்கிறது அந்த பாடல்.
No comments:
Post a Comment