சுதந்திர தின உரையில் மதுவிலக்கு பற்றி முதல்வர் ஜெயலலிதா அறிவிக்காதது வருத்தம் அளிக்கிறது என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 69வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலத்தில் அக்கட்சியின மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தேசிய கொடியேற்றி கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
சுதந்திரம் என்பது பசி, வறுமை, வன்முறை இல்லாத நிலையில் மக்கள் வாழ வேண்டும் என்பதுதான். ஆனால் தமிழகத்தில் மதுவினால் 60 சதவீத மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மது விலக்கை அமல்படுத்த அரசியல் கட்சிகள், மாணவர்கள், பெண்கள் போராடி வருகிறார்கள். ஜனநாயக நாட்டில் எந்தவொரு பிரச்சனையிலும் ஆளுங்கட்சியினர் தங்கள் விருப்பத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். அந்த வகையில் மது விலக்கு பற்றிய அறிவிப்போ அல்லது மது விலக்கு தொடர்பான அறிகுறிகளோ முதல்-அமைச்சரின் சுதந்திர தின விழாவில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது
போராட்டத்தின் தன்மை உணர்ந்து மக்களின் கருத்தையும் மனதில் வைத்து முதல்வர் மது விலக்கு பற்றி எதுவும் பேசாதது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment