டெல்லி ஆதார் அட்டையை எவற்றுக்கெல்லாம் பயன்படுத்தலாம்... எந்தெந்த விஷயங்களில் அந்த அட்டை அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. ஆதார் அட்டை தேவையா இல்லையா என்ற வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு முன் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே, சி.நாகப்பன் ஆகியோர் இடைக்கால உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தார்கள்.
அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது:
1. அரசின் சலுகைகளை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது. இதுபற்றி மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பத்திரிகைகள் வழியாகவும் விளம்பரப்படுத்த வேண்டும்.
2. பொது வினியோக திட்டம் (ரேஷன்), மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் வினியோகம் தவிர்த்து பிற நோக்கங்களுக்கு ஆதார் அட்டை பயன்படுத்தப்படக்கூடாது.
3. பொது வினியோகத் திட்டம், மண்ணெண்ணெய், சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு கூட இந்த ஆதார் அட்டை கட்டாயம் கிடையாது.
4. ஆதார் அட்டைக்காக பதிவு செய்கிற தகவல்களை குற்ற வழக்கு விசாரணை தவிர்த்து பிற எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அதையும் நீதிமன்ற அனுமதி பெற்றுத்தான் செய்ய வேண்டும்.
4. அதே நேரம், ஆதார் அட்டை வழங்குவதற்கு தகவல்கள் பதிவு செய்கிற நடவடிக்கையை நிறுத்திவைத்து உத்தரவிட வேண்டும் என்ற வழக்குதாரர்களின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர்.
No comments:
Post a Comment