கிரேடிட் கார்டை தொலைப்பது என்பது நம்மில் பலருக்கும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தும். அதற்குக் காரணம் அதற்கான எச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றி நாம் அறியாதது தான். கிரேடிட் கார்டு தொலையும் போது பெரியளவில் நிதி இழப்பு ஏற்படலாம், குறிப்பாக உங்களது கடன் வரம்பு அதிகமாக இருக்கும் போது. சரி கிரேடிட் கார்டு தொலைந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்...
கிரேடிட் கார்டை முடக்குதல்... நீங்கள் முதலில் செய்ய வேண்டியது, உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து உங்கள் கார்டை முடக்க வேண்டும். உங்கள் கார்டை முடக்கக் கணக்கு எண், கடைசியாக நடந்த பரிவர்த்தனை தொகை, கார்டு தொலைந்த தேதி போன்ற சில பாதுகாப்புச் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் கூறியாக வேண்டும். உங்கள் வங்கி கணக்குடன் உங்கள் கிரேடிட் கார்டு இணைக்கப்பட்டிருந்தால், நெட் பேங்கிங் மூலமாக அதனை நீங்கள் செயலிழக்க செய்யலாம்.
மின்னஞ்சல் வங்கியிடம் இருந்து ஒப்புகை பெரும் வரை மின்னஞ்சல் அல்லது முறையான கடிதம் மூலம் வங்கியைப் பின்பற்றுவது நல்லது. பின்னர் ஏதேனும் பிரச்சனை ஏற்படும் போது இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
காவல் நிலையத்தில் புகார் உங்கள் கார்டு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருந்தால், நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். மிகப்பெரிய தொகைக்குப் பரிவர்த்தனை நடந்திருக்கும் வேளையில் இது மிகவும் உதவியாக இருக்கும். (டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுக்கும் என்ன வித்தியாசம்??)
புதிய கார்டு இந்நிலையில் கார்டு தொலைந்த உடன் கார்டை முடங்கி, வங்கி அல்லது காவல் துறைக்குப் புகார் அளிக்க வேண்டும். மீண்டும் கிரேடிட் கார்டை பெற நீங்கள் விரும்பினால், பொருந்தக்கூடிய கூடுதல் கட்டணங்களைச் செலுத்தி நீங்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம். இக்கட்டணம் ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
காப்பீட்டு வசதி.. உங்கள் கிரேடிட் கார்டு மீது சில வங்கிகள் காப்பீட்டை வழங்குகிறது. விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது இயலாமை பயன்களைப் பெறுவதன் அடிப்படையில் காப்பீட்டிற்கு நாமினிகளின் விபரத்தை கிரேடிட் கார்டு உடைமையாளர்களிடம் இருந்து எழுத்து வடிவில் வங்கிகள் எதிர்பார்க்கும்.
பாதுகாப்பு எண் கிரேடிட் கார்டின் எண்ணில் தான் அதன் பிரதான பாதுகாப்பு அமைந்துள்ளது. அதனை வெளிப்படுத்தினால் பாதுகாப்பும் பறிபோனதைப் போலத் தான். அதனால் உங்கள் கார்டை பயன்படுத்தும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். பாதுகாப்பை எண்ணை கொண்டு யார் வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
வாடிக்கையாளர் சேவை மையம்.. வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு நீங்கள் அழைக்கும் போது கடைசியாக வந்த கிரேடிட் அறிக்கையைக் கையோடு வைத்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பு சம்பந்தமான சில கேள்விகளைக் கேட்க உங்களுக்கு அது உதவிடும்.
எச்சரிக்கைகள்: 1) கார்டை பாதுகாப்பாக வைத்திடுங்கள். 2) கார்டை எடுத்துச் செல்லும் போது பின் எண்ணையும் உடன் எடுத்துச் செல்லாதீர்கள். 3) பழைய கார்டை கண்டிப்பாக அழித்து விட வேண்டும். 4) குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் அறிக்கையைச் சரிபார்த்துக் பாருங்கள். 5) உங்கள் நண்பர்களிடம் உங்கள் கிரேடிட் கார்டை கொடுக்காமல் இருப்பது நல்லது.
இறுதிச் சுருக்கம்: கிரேடிட் கார்டை தொலைத்ததால் ஏற்பட்டுள்ள நிதி இழப்பிற்கான பொறுப்பை வங்கிகள் உங்கள் தலையிலேயே கட்டி விடலாம். அதனால் கிரேடிட் கார்டை மிகக் கவனமாக வைத்துக் கொள்வது நல்லதாகும். ஒருவேளை, கிரேடிட் கார்டு தொலைந்து விட்டால், பெரிய நிதி இழப்பைத் தவிர்க்க துரித நடவடிக்கையை மேற்கொள்ளவும்.
கேஷ் பேக் கேஷ் பேக் என்பது ஒரு புதை குழி!! உஷார்..
சமுக வளைதள இணைப்புகள் இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
No comments:
Post a Comment