இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011 ஆம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், இந்து மக்கள் தொகை சதவீதம் குறைந்துள்ளதாகவும், முஸ்லிம் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 121.09 கோடியாக உள்ளதாக இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில், இந்துக்கள் 96.63 கோடி பேர் உள்ளனர், முஸ்லிம்கள் 17.22 கோடி பேரும், கிறிஸ்தவர்கள் 2.78 கோடி பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கு அடுத்து சீக்கியர்கள் 2.08 கோடி பேரும், பவுத்த மதத்தினர் 84 லட்சம் பேரும், சமண சமயத்தினர் 45 லட்சம் பேரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் 79 லட்சம் பேரும், எந்த மதத்தையும் சாராதவர்கள் 29 லட்சம் பேரும் உள்ளனர்.
மேலும், 2001 முதல் 2011 வரையிலான 10 ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கள் தொகையானது 0.8 சதவீதம் அதிகரித்து 13.8 கோடியிலிருந்து 17.22 கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம் இந்துகளின் எண்ணிக்கையானது 0.7 குறைந்துள்ளது. இந்து மதத்தை சேர்ந்தவர்களின் மக்கள் தொகை தற்போது 96.63 கோடியாக உள்ளது.
இது மொத்த மக்கள் தொகையில் 79.8 சதவீதம் ஆகும். முஸ்லிம்கள் 17.22 கோடி (சதவீதம் 14.2), கிறிஸ்துவர்கள் 2.78 கோடி (2.3 சதவீதம்), சீக்கியர்கள் 2.08 கோடி (1.7 சதவீதம்), புத்த மதத்தினர் 0.84 கோடி (0.7 சதவீதம்), ஜெயின் 0.45 கோடி (0.4 சதவீதம்), மற்ற மதங்கள் மற்றும் நம்பிக்கைகளை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையானது 0.79 கோடி (0.7 சதவீதம்) என்ற அளவில் உள்ளனர்.
எந்த ஒரு மதத்தையோ அல்லது நம்பிக்கையோ பின்பற்றாதவர்கள் அல்லது தங்கள் மதங்களை பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை 0.29 கோடி (0.2 சதவீதம்) உள்ளது என இந்த கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 102 கோடியாக இருந்தது. 2001-2011 இடைப்பட்ட காலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.7 சதவீதமாக இருந்துள்ளது. இதே காலத்தில் மதங்கள் வாரியான மக்கள் தொகை அதிகரிப்பு இந்துக்கள் 16.8 சதவீதம், முஸ்லிம் 24.6 சதவீதம், கிறிஸ்துவர் 15.5 சதவீதம், சீக்கிய 8.4 சதவீதம், புத்தம் 6.1 சதவீதம், ஜெயின் 5.4 சதவீதம் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
2011ல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்திய மக்களின் சமூக மற்றும் பொருளாதார ரீதியிலான நிலவரங்கள் கடந்த ஜூலை 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜாதி வாரியான புள்ளிவிபரங்களை வெளியிட வேண்டுமென, தி.மு.க., பா.ம.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனாலும், அந்த விபரங்கள் வெளியிடப்படாத நிலையில், தற்போது மத வாரியான புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 6 கோடியே 31 லட்சம் இந்துக்கள்
தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 என மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
இதில் இந்துக்கள் 6 கோடியே 31 லட்சத்து 88,168 பேர் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இஸ்லாமியர்கள் 42 லட்சத்து 29,479 பேரும், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 44 லட்சத்து 18,331 உள்ளனர்.புத்த மதத்தினர் 11,186 பேரும், ஜைன மதத்தினர் 89,265 பேரும் தமிழகத்தில் வாழ்கின்றனர்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் மொத்த மக்கள் தொகை 12 லட்சத்து 47 ஆயிரத்து 953 ஆகும்.இதில் இந்துக்கள் - 10,89,409இஸ்லாமியர்கள் - 75,556கிறிஸ்தவர்கள் - 78,550புத்த மதத்தினர் - 451ஜைன மதத்தினர் - 1,400 பேர்.
No comments:
Post a Comment