Latest News

இடஒதுக்கீடு கோரி பந்த்: குஜராத்தில் வெடித்த கலவரத்தில் 3 பேர் சாவு- ராணுவம் வரவழைப்பு!!


குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் (ஓ.பி.சி.) சேர்க்கக் கோரி நடைபெற்று வரும் முழு அடைப்புப் போராட்டத்தால் அம்மாநிலம் முடங்கிப் போயுள்ளது. பல நகரங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. வன்முறையில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். படேல் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி நடத்தி வரும் பெரும் வன்முறையாக வெடித்துள்ளது. இந்த போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஹர்திக் படேல் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அம் மாநிலம் முழுவதும் இன்று பந்த் நடைபெற்றது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகமதாபாத், சூரத், மேஷனா, விஸ்நகர், உஞ்சா ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை சம்பவங்கள் வெடித்ததையடுத்து குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆலோசனை மேற்கொண்டார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிலைமையை சமாளிக்க கூடுதல் படைகளை மத்திய அரசு அனுப்பும் என ராஜ்நாத் சிங் உறுதியளித்ததாக முதல்வர் ஆனந்திபென் தெரிவித்தார். இந்த பந்த் காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சந்தைகளும் வெறிச்சோடி காணப்படுகின்றன. பந்த் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சூரத் நகரில்நடந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் அமைதிகாக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.