Latest News

ஒடிஷா: டுபாக்கூர் பெண் சாமியார் சாரதி பாபா கைது- ஆசிரமத்தில் ஏராளமான நிர்வாண புகைப்படங்கள் சிக்கின!!


ஒடிஷாவில் கடந்த சில வாரங்களாக பெரும் பரபரப்பை கிளப்பி வந்த டுபாக்கூர் பெண் சாமியார் சாரதி பாபா கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஆசிரமத்தில் இருந்து இளம்பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் ஏராளமாக சிக்கியுள்ளன. அத்துடன் தங்கம், வெள்ளி, ரொக்கப் பணம் என ஏராளமானவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெண்களை பாலியல் கொடுமைக்குள்ளாக்கிய புகார்களில் சாரதி பாபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒடிஷாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பாரிமுலா பகுதியில் ஆசிரமம் அமைத்து சுகபோக வாழ்க்கை நடத்திய சாமியார் சாரதி பாபா. அண்மையில் ஹைதராபாத்தில் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மெடிக்கல் மாணவியுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு குத்தாட்டம் போட்டதை உள்ளூர் டிவி சேனல் ரகசியமாக படம்பிடித்து ஒளிபரப்பியது. இது ஒடிஷாவில் பரபரப்பைக் கிளப்பியது. இந்த சர்ச்சைக்குரிய சாமியாரை கைது செய்து ஆசிரமத்தை இழுத்து மூட வேண்டும் என்று கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் நேற்று இரவு முதல் 12 மணிநேரம் சாரதி பாபாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி பின்னர் கைது செய்தனர். அப்போது ஆசிரமத்தில் இருந்து தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இருப்பினும் தம் மீதான புகார் வெடித்த நிலையிலேயே 10க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை எடுத்து சாரதி பாபா பதுக்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது ஆசிரமத்தில் இருந்து ஏராளமான இளம்பெண்களில் நிர்வாண புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆசிரமத்துக்கு வரும் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே பாத்ரூமில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் படம்பிடிக்கப்பட்டவையே இவை அனைத்தும் என தெரியவந்துள்ளது. இந்த இளம்பெண்களை மிரட்டி பாலியல் கொடூரங்களை சாரதி பாபா அரங்கேற்றியதும் அம்பலமாகியது. அவரது ஆசிரமத்தில் இன்னமும் சோதனை நடத்தினால் ஏராளமான தகவல்கள் வரும் என்கின்றனர் ஒடிஷா போலீசார். இதனிடையே இந்த டுபாக்கூர் சாரதி பாபாவுக்கு தூக்கு தண்டனை வழங்கக் கோரி ஃபேஸ்புக்கில் தனியே பக்கம் தொடங்கப்பட்டு பிரசாரமும் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.