தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது காமராஜர் அரங்கத்தில் பணி புரியும் பெண் ஊழியர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கிற்கு சொந்தமான வணிக வளாக கடைகளில் இருந்து பெறப்பட்ட பணத்தில், பல கோடி ரூபாயை வணிக வளாகத்தின் மேலாளர் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் மோசடி செய்ததாக கூறி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காமராஜர் அலுவலகத்தில் தொலைபேசி உதவியாளராக பணியாற்றி வருபவர் வளர்மதி. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் காமராஜர் அரங்கிற்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள 120 கடைகளில் இருந்து பெறப்படும் பணத்தில், பல கோடி ரூபாயை வணிக வளாக மேலாளர் நாராயணன் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தால், தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் வளர்மதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அந்த பெண் ஊழியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment