திருவாரூரில் மாவட்ட திமுக தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளார் தமிழன் பிரசன்னா படிக்கட்டுமா இல்லை குடிக்கட்டுமா என கேட்கும் கேவலமான ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கிறது என்று தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூர் தி.மு.க சார்பில் கலைஞரின் பூரண மதுவிலக்கு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நீதி கேட்கும் பேரணி விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தலைமை கழக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா பேசினார். அப்பொழுது அவர், " தி.மு.க ஆட்சியில் தமிழக முழுவதும் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டது. பெரிய முதலீட்டார்கள் கொண்டு வரப்பட்டனர். அதேபோல் தளபதி தமிழகத்தில் 80 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்து சேர்ப்பேன் என்றார். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டில் 62 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு சேர்த்தார். இன்றைக்கு இப்பகுதி ஏழை விவசாயி பெண் கூட சென்னையில் 1.75 லட்சம் சம்பளம் வாங்கிறது என்றால் அது தி.மு.க ஆட்சியால் மட்டும் தான் முடியும்.
கலைஞர் ஆட்சியில் தெருவுக்கு தெரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. ஆனால் அம்மா தனது ஆட்சியில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடை திறந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழக முழுவதும் 7312 டாஸ்மாக் பாரையும் திறந்து இருக்கிறார். கலைஞர் ஆட்சியில் படி என்றார்கள் அம்மா ஆட்சியில் குடி என்கிறார்கள். இன்றைக்கு மாணவர்கள் பெற்றோரை பார்த்து படிக்கவா? குடிக்கவா? என்று கேட்கும் கேவலமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த மட்டும் போக முடியவில்லை. ஆனால் மோடியை வரவேற்க ஏர்ப்போர்ட்டில் கால் கடுக்க நிற்கிறார். இன்று தமிழகத்தில் அண்ணா திமுக ஆட்சி நடைபெறவில்லை, அடிமை திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது, 127 நாட்களாக சட்டமன்றம் பூட்டி கிடக்கிறது என்பது கேவலமாக உள்ளது" என்று பேசினார்
No comments:
Post a Comment