தமிழக தலைமை தகவல் ஆணையர் நியமன விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தம்மை கலந்தாலேசிக்காதது குறித்து ஆளுநர் ரோசையாவை சந்தித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனு ஒன்றை அளித்துள்ளார். பூரண மதுவிலக்கைக் கோரி வரும் 13 ஆம் தேதி தே.மு.தி.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில், விஜயகாந்த் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில், ரோசய்யாவை சந்தித்துப் பேசிய பிறகு, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய விஜயகாந்த், சட்டப்பேரவைக்கு தேவையான நேரம் வரும் போது வருவேன் என்று கூறினார். தமிழக தகவல் ஆணையராக, முன்னாள் டி.ஜி.பி., ராமானுஜம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என ஆளுநரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாக விஜயகாந்த் தெரிவித்தார். மேலும் இது குறித்து, எதிர்க்கட்சி தலைவரான தம்மிடம் தமிழக அரசு கலந்து ஆலோசனை செய்யவில்லை எனவும் அவர் கூறினார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 15 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். சட்டசபை கூட்டத்தொடரை முடித்து வைக்க வேண்டும் எனவும் மனுவில் கூறியுள்ளதாக விஜயகாந்த் தெரிவித்துள்ளார். பூரண மதுவிலக்குக்கான சட்டத்தை அமல்படுத்த சட்டமன்றத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன், செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். இதனைத் தொடர்ந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார்.
No comments:
Post a Comment