கேரள மாநிலம் இயற்கை அழகு பூத்துக் குலுங்கும் இடமாக மட்டும் இல்லாமல் வர்த்தகம் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு உகந்த இடமாகவும் உள்ளது. இம்மாநில மக்களும் கேரளா மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஏன் உலகளவில் பல துறை வர்த்தகத்தில் சிறந்து விளங்கி உள்ளனர். இந்நிலையில் உலகளவில் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் டாப் 10 பணக்கார மலையாள மனிதர்களை இங்குப் பட்டியலிட்டுள்ளோம். இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள 60% பேர் ஐக்கிய அரபு நாடுகளில் தங்களது வர்த்தகத்தைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவி பிள்ளை இவர் கட்டுமானம் மற்றும் இன்ஜினியரிங் சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் விருந்தோம்பல் (hospitality) போன்ற துறைகளில் சிறப்பாகச் செயல்படும் ஆர்பி குரூப் நிறுவனத்தின் தலைவரான ரவி பிள்ளை 18,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவர் தனது வர்த்தகத்தைப் பஹ்ரைன் தலைமையாகக் கொண்டு செயல்படுத்தி வருகிறார்.
எம் ஏ யூசஃப்அலி இவர் தனது வர்த்தகத்தை அபுதாபியை தலைமையிடமாகக் கொண்டு ரிடைல் மற்றும் விருந்தோம்பல் (hospitality) துறையில் செயல்பட்டு வருகிறார். ரிடைல் வர்த்தகத்தில் இவரது நிறுவனம் 9 நாடுகளில் 113 கடைகள் கொண்டு இயங்கி வருகிறது. இவரது சொத்து மதிப்பு 16,300 கோடி ரூபாயாகும்.
பிஎன்சி மேனன் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்குப் பெயர்போன துபாய் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு பிஎன்சி மேனன் கட்டுமானத்திலும், ரியல் எஸ்டேட் துறையிலும் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறார். இவரது தலைமையில் செயல்படும் பிஎன்சி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் வருடத்திற்கு 150 கோடி லாபத்தைப் பெறுகிறது. இவரின் மொத்த சொத்து மதிப்பு 13,000 கோடியாகும்.
சன்னி வர்கி கட்டுமானம், ரியல் எஸ்டேட் துறை மட்டும் அல்லாமல் துபாய் கல்வித்துறையிலும் சிறந்து விளங்குகிறது. 1959ஆம் ஆண்டுத் துபாய் சென்ற சன்னி வர்கி தனது தந்தை ஓய்வு பெற்ற பின் தனியார் ஆங்கில வழிக் பள்ளியை நிறுவினார். இதன் பின் தொடர் விரிவாக்கம் மற்றும் வளர்ச்சியின் மூலம் துபாய் கல்வித்துறையில் சன்னி வர்கி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 11,200 கோடி ரூபாய்.
சேனாபதி கோபாலகிருஷ்ணன் இந்தியாவின் முன்னணி மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் சீஇஓ தான் கிரிஸ் என அழைக்கப்படும் சேனாபதி கோபாலகிருஷ்ணன். டாப் 10 பணக்கார மலையாள மனிதர்களில் இவர் 5 வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 7,860 கோடி ரூபாய்.
டி.எஸ் கல்யாணராமன் இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் தங்க நகை வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் கல்யான் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் தான் டி.எஸ் கல்யாணராமன் அவர்கள். இவரின் மொத்த சொத்து மதிப்பு 6,600 கோடி ரூபாய்.
எம் ஜி ஜார்ஜ் முத்தூட் தங்கக் கடன் மற்றும் நாணய பரிமாற்றா சேவையில் சிறந்து விளங்கும் முத்துட் குரூப் நிறுவனத்தைத் தலைவர் எம் ஜி ஜார்ஜ் முத்தூட். இந்நிறுவனத்தின் 29.8 சதவீத பங்குகளை இவரது குடும்பத்தின் 12 உறவினர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு 5,550 கோடி ரூபாயாகும்.
ஆசாத் முப்பென் துபாய் நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் தான் ஆசாத் முப்பென். மருத்துவ முதுகலை படிப்பில் தங்கப் பதக்கம் பெற்ற இவர் 1982ஆம் ஆண்டுத் தனது படிப்பை முடித்து விட்டு 5 ஆண்டுகளுக்குப் பின் துபாய் மண்ணில் தனது வர்த்தகத்தைத் துவங்கினார். இவரின் சொத்து மதிப்பு 5,500 கோடி ரூபாய்.
ஷிபுலால் இன்போசிஸ் நிறுவனர்களின் மற்றொருவரான ஷிபுலால் இப்பட்டியலில் 5,250 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 9வது இடத்தைப் படித்துள்ளார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் 2.3 கோடி பங்குகளை வைத்துள்ளார்.
அருண் குமார் கேரளா மாநிலத்தின் கொல்லம் மாவட்டை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஸ்டிரைஸ் அக்ரோலேப் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சீஇஓ-வான அருண் இப்பட்டியலில் 10 வது அதாவது கடைசி இடத்தைப் பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4,800 கோடி ரூபாய் ஆகும்.
இன்போசிஸ் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையை மாற்றியமைத்த இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவிய குழுவில் இரண்டு மலையாளிகள் உள்ளனர். இவருவம் இப்பட்டியலில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையை மாற்றியமைத்த இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவிய குழுவில் இரண்டு மலையாளிகள் உள்ளனர். இவருவம் இப்பட்டியலில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்கது.
சமுக வளைதள இணைப்புகள் இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம். கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
No comments:
Post a Comment