சட்டசபைத் தேர்தலை கூட்டாக சேர்ந்து சந்திப்பது எப்படி என்பது குறித்து மற்ற கட்சிகள் எல்லாம் மண்டையை உடைத்துக் கொண்டுள்ள நிலையில் அதிமுக சத்தம் போடாமல் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது. எந்தக் கட்சியும் எதிர்பாராத வகையில் ஒட்டுமொத்தமாக ஐந்தரை கோடி வாக்காளர்களுக்கும் அதிமுக குறி வைத்து ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் வாக்கு சேகரிப்பாளரை நியமிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் அதிமுகவினர் சந்திக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அதிமுக தரப்பு உற்சாகமடைந்துள்ளது.
தட்டி எழுப்பிய அதிமுக குதிரை சட்டசபைத் தேர்தலைச் சந்திப்பது குறித்து ஒவ்வொரு கட்சியும் உத்திகள், கூட்டணி குறித்த கவலையில்தான் முழுமையாக உள்ளன. இந்த நிலையில் தேர்தல் குதிரையை தட்டி எழுப்பியுள்ளது அதிமுக மேலிடம்.
வாக்காளர்களை சந்தியுங்கள் தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட 5.60 கோடி வாக்காளர்களையும் ஒருவர் விடாமல் அனைவரையும் சந்தியுங்கள் என்று அதிரடியாக ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வாக்கு சேகரிப்பாளர் என்ற புதிய விஷயத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
கூட்டணி எப்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக பேசி முடித்து விட்டதாக ஒரு "டாக்" உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயலலிதாவின் அறிவிப்பு உள்ளது.
ஆலோசனைக் கூட்டம் இந்த நிலையில் இன்று அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.
வாக்கு சேகரிப்பாளர் இந்தக் குழு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள வாக்கு சேகரிப்பாளர் உள்ளிட்டவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
எல்லாப் பொறுப்பும் இவர்களுக்கே இந்த வாக்கு சேகரிப்பாளர் பொறுப்பில் முக்கியப் புள்ளிகள் நியமிக்கப்படவுள்ளனர். அந்த வாக்குச் சாவடியில் பெருமளவிலான வாக்குகளைத் திருட்டும் பொறுப்பு இவர்களுக்குரியதாகும்.
No comments:
Post a Comment