குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மனைவி சுவ்ரா முகர்ஜி மறைவுக்கு தமிழக ஆளுநர் ரோசையா, முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரணாப் முகர்ஜிக்கு ஆளுநர் ரோசையா எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில் கூறியுள்ளதாவது...
உங்கள் அன்பு மனைவி சுவ்ரா முகர்ஜி மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்து, துயருற்றேன். உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். இவ்வாறு ஆளுநர் ரோசய்யா தனது இரங்கல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று பிரணாப்புக்கு முதல்வர் ஜெயலலிதாவும் இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது... உங்கள் அன்பு மனைவி சுவ்ரா முகர்ஜி மரணம் அடைந்த செய்தி அறிந்து துயருற்றேன். இது போன்ற துயரமான சூழ்நிலையில் எந்த ஆறுதல் வார்த்தைகளும் போதுமானதாக இருக்காது என்றாலும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இந்த துயரில் பங்கு கொள்கிறேன். உங்களுக்கு நேரிட்ட இந்த துயரத்தை தாங்கும் வகையில் இறைவன் உங்களுக்கு போதிய வலிமையையும், மனோபாவமும் அளிக்க பிரார்த்திக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தி அடைவதாக.. இவ்வாறு தனது இரங்கல் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment