பிரதமர் பதவிக்கு வந்தது முதல் இதுவரை கடந்த 15 மாதங்களில் 25 நாடுகளை சுற்றி வந்து விட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இதுவரை இந்தியாவில் எந்தப் பிரதமரும் இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை நாடுகளை வலம் வந்ததில்லையாம்.
கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. அதன் பின்னர் முதல் நாடாக அவர் பூட்டானுக்குப் போய் வந்தார். தற்போது கடைசியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு அவர் போய் விட்டுத் திரும்பியுள்ளார். இது அவரது 25வது வெளிநாட்டுப் பயணமாகும்.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் குறித்த ஒரு தொகுப்பு:
2015, ஆகஸ்ட் 16-176, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
2015, ஜூலை 12-13, தஜிகிஸ்தான்
2015, ஜூலை 10-11, துர்க்மேனிஸ்தான்.
2015, ஜூலை 8-10, ரஷ்யா.
2015, ஜூலை 7-8, கஜகஸ்தான்.
2015, ஜூலை 6-7, உஸ்பெக்கிஸ்தான்.
2015, ஜூன் 6-7, வங்கதேசம்.
2015, மே 18-19, கொரியா.
2015, மே 17-18, மங்கோலியா.
2015, மே 14-16, சீனா.
2015, ஏப்ரல் 14-17, கனடா.
2015, ஏப்ரல் 12-14, ஜெர்மனி.
2015, ஏப்ரல் 9-11, பிரான்ஸ்.
2015, மார்ச் 13-14, இலங்கை.
2015, மார்ச் 11-12, மொரீஷியஸ்.
2015, மார்ச் 10-11, செஷல்ஸ்.
2014, நவம்பர் 25-27, நேபாளம்.
2014, நவம்பர் 9, பிஜி.
2014, நவம்பர் 11-13, மியான்மர்
2014, நவம்பர் 13-14, ஆஸ்திரேலியா
2014, செப்டம்பர் 26-30, அமெரிக்கா.
2014, ஆகஸ்ட் 30 - செப்டம்பர் 3, ஜப்பான்.
2014, ஆகஸ்ட் 3-4, நேபாளம்.
2014, ஜூலை 14-16, பிரேசில்.
2014, ஜூன் 15-16, பூட்டான்.
இந்த வெளிநாட்டுப் பயணங்களில் மோடி ஒரு நாள் மட்டுமே போய் வந்த வெளிநாட்டுப் பயணங்கள் மிகவும் குறைவாகும். அதாவது ஒரே ஒரு நாட்டுக்கு மட்டுமே அவர் ஒரு நாள் பயணம் மேற்கொண்டு திரும்பினார். மற்றவை எல்லாம் குறைந்தது 2 நாள் பயணமாகும்.
No comments:
Post a Comment