சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் திமுக, தேமுதிகவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சி முதற் கட்டமாக 120 தொகுதிகளில் வீடு வீடாக துண்டுப் பிரசுரம் கொடுத்துப் பிரச்சாரம் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறை சென்ற போது எதிர்கட்சியினர் பலரும் முதல்வர் கனவில் வலம் வந்தனர். பாஜக தலைமையில் ஒரு அணி, திமுக தலைமையில் ஒரு அணி பாமக தலைமையில் அன்புமணியை முதல்வராக அறிவித்து ஒரு அணி, விஜயகாந்த் தலைமையில் ஒரு அணி என எதிர்கட்சியினர் தேர்தலுக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்தது. இதனையடுத்து அரசியல் வானில் காட்சிகள் மாறின. ஆளும் அதிமுகவிற்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தயாராகி வருகிறது திமுக. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய தயாராகிவிட்டார். இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்தும் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
பாமக அறிவிப்பு இந்நிலையில் பாமக திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணி வைக்கப் போவதில்லை எனவும் 2016ம் ஆண்டு பாமக தலைமையில் புதிய ஆட்சி அமையும் எனவும், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் எனவும் அறிவிப்பு வெளியிட்டது.
பாமக மாநாடு பாமக முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து திமுக, அதிமுக இரு கட்சிகளையும் விமர்சித்து சோழ மண்டலம், சேரமண்டலம், பாண்டிய மண்டலம் என ஒவ்வொரு மண்டலமாக பாமக சார்பில் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.
மதுவிலக்கு போராட்டம் மது விலக்குப் போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வரும் நிலையில் பாமகவினர் 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தற்போது தொடங்கியுள்ளனர்.
மாற்றம் முன்னேற்றம் `2016ம் ஆண்டு ஆட்சி மாற்றம். முன்னேற்றத்துக்கான மாற்றம் ஏன்? எதற்கு?' என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரத்தை நேற்று விருத்தாசலம், நெய்வேலி தொகுதிகளில் விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டனர். 120 தொகுதிகளில் முதற்கட்டமாக பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள பாமகவினர், தமிழகத்தின் இன்றைய அடிப்படைத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து வருகின்றனர்.
மாசிவ் அட்டாக் இந்த பிரச்சாரத்திற்கு ‘மாசிவ் அட்டாக்' என்று கூறி வரும் பாமகவினர் வடமாவட்டங்களில் தேமுதிக, திமுகவினருக்கு அதிரடி அட்டாக் கொடுக்க தயாராகி வருகின்றனர் பாமகவினர். அதற்காகவே துண்டு பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது.
கலக்கத்தில் கட்சிகள் திராவிடக் கட்சிகளுடன் இனி ஒருபோதும் கூட்டணி கிடையாது என கூறும் பாமகவினர் வீடு வீடாகச் சென்று துண்டு பிரசுரத்தை விநியோகித்து தேர்தல் பணிகளை தொடங்கியிருப்பது, திமுக, தேமுதிகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment