பிரேசில் நாட்டின் கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 74). இவர் முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சாவோ பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் பீலே அனுமதிக் கப்பட்டுள்ளார். குடும்பத்தினர் வேண்டுகோளின்படி மருத்துவமனை வட்டாரம் அவரது சிகிச்சை குறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்கவில்லை. கடந்த வியாழக்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற்றதாவும், தற்போது பீலே நலமுடன் இருப்பதாகவும், திங்கள்கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் உள்ளூர் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
முதுகெலும்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பீலேவுக்கு காலில் பலம் குறைந்திருக்கிறது. அவரது வலது காலில் முழுமையாக பலம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
பீலே கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த கல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் சிறுநீரகத் தொற்று பாதிப்பு காரணமாக கடந்த மே மாதம் அவர் நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிரேசில் நாட்டிற்காக மூன்று முறை உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே வீரர் பீலே என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment