அதிரை மேலத்தெரு 31 சங்கம் சார்பாக ஒரு அணிக்கு ஆறு வீரர்கள் விளையாடும் சிறப்பு கிரிக்கெட் போட்டி தொடர் இன்று மதியம் மரைக்கா குளம் அருகில் உள்ள மேலத்தெரு பூங்காவில் துவங்கியது. இது இன்றும் நாளையும் நடைபெறும். ரப்பர் பந்தில் நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில் மொத்தம் எட்டு அணிகளும் ஒரு அணிக்கு தலா 6 வீரர்களும் விளையாடுவார்கள்.
வழக்கமான கிரிக்கெட் போட்டிகள் போல் அல்லாமல் வித்தியாசமான விதிமுறைகள் இப்போட்டியில் கடைபிடிக்கப்படுகின்றன. இப்போட்டியில் விளையாடுவதற்க்காக மேலத்தெருவை சேர்ந்த பல இளைஞர்கள் தங்களை பல்வேறு அணிகளாக பிரித்துக் கொண்டு அவற்றுக்கு தனித்தணி பெயர்களை வைத்துக்கொண்டு விளையாடவுள்ளனர்.
இத்தொடரில் வெற்றி பெறுபர்களுக்கான பரிசு விபரம்:
முதல் பரிசு: 2000
இரண்டாம் பரிசு: 1500
நன்றி : அதிரைபிறை
No comments:
Post a Comment