அப்துல் கலாம் மறைவிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் தென்காசி நகர்மன்ற கூட்டத்தை ஒத்திவைக்காததை கண்டித்து சுயேச்சை கவுன்சிலர் மாரி செல்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவால் இந்தியாவே சோகத்தில் மூழ்கியுள்ளது. பல்வேறு வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், தென்காசி நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் நகர்மன்றத் தலைவர் பானு தலைமையில் நடைப்பெற்றது. கூட்டம் தொடங்கிய உடன் 29வது வார்டு சுயேட்சை நகரமன்ற உறுப்பினர் மாரிசெல்வி பேசினார். அப்போது அவர், ‘இன்று நாடே துக்கத்தில் இருக்கும் போது உலக மக்களிடையே ஒப்பற்ற மனிதனாக வாழ்ந்துக் காட்டிய மாமனிதர் மாண்புமிகு அப்துல்கலாம் அவர்களது மறைவுக்கும்,முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் அவர்கள் மறைவுக்கும் அஞ்சலி செலுத்தி இக்கூட்டத்தை ஒத்தி வைக்க கோரிக்கை வைத்தும் ஒத்தி வைக்காமல் கூட்டம் நடத்தியதைக் கண்டித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக' கூறினார். அதன் தொடர்ச்சியாக தன்னுடைய ராஜினாமா கடிதத்தையும் தலைவர் பானுவிடம் அவர் வழங்கினார். அப்போது அவர் சிரித்த முகத்துடன் காணப்பட்டதுதான் சற்று யோசனைக்குரியதாக இருந்தது.
No comments:
Post a Comment