தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருச்சியில் இன்று காமராஜர் பிறந்த நாள் விழா பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
மக்களின் கருத்துக்களை அறியாமல் சிலர் ஆட்சி செய்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள சில ஆட்சியாளர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்வதில்லை. பிரதமராக, முதல்வராக மக்கள் விருப்பம் அறியாது ஆட்சி நடத்த முடியும் என நினைக்கிறார்கள். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. தமிழக அரசு இளைஞர்களின் குரலை கேட்பதில்லை.
தமிழகத்தில் கடன் வாங்கி மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உள்ளது. ஒரு இளைஞர் கல்வி பெற்றால் வளமான எதிர்காலம் அமையும். தமிழகத்தின் தலையாய பிரச்சனை வேலைவாய்ப்பின்மை. வேலைவாயப்பு மட்டுமே ஒவ்வொருவரும் முன்னேறுவதற்கான வழியாகும். தமிழகத்தில் மூன்றில் ஒரு இளைஞருக்கு வேலை இல்லை. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைகிடைக்க காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றார்.
No comments:
Post a Comment