பாட்னா: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து எப்போது வழங்கப்படும் என்பது உட்பட பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் 7 கேள்விகளை முன்வைத்துள்ளார். பிரதமர் மோடி இன்று பீகார் தலைநகர் பாட்னாவுக்கு வருகை தந்துள்ளார். பிறகு முஸாபர்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதையொட்டி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடி அவர்களே உங்களுக்கு நான் 7 கேள்விகளை முன்வைக்கிறேன். அவற்றில் 2 பீகார் மாநிலம் தொடர்புடையது; 5 கேள்விகள் பொதுவானவை. இந்திய தேசம் உங்கள் பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment