திருப்பூர்: இரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு மனைவியும் தற்கொலை செய்த தகவலை அறிந்த, கணவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகேயுள்ள ஊத்துப்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன். இவருக்கும் மனைவி சந்திராவுக்கும் அவ்வப்போது தகராறு இருந்து வந்துள்ளது. இன்றும், கணவன்-மனைவி சண்டை போட்டுள்ளனர். சண்டை முற்றிய நிலையில், கோபமடைந்த சந்திரா, தனது இரு குழந்தைகளுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காளியப்பன், மனைவி, மக்கள் இல்லாமல் ஏன் உயிர்வாழ வேண்டும் என்ற ஆதங்கத்தில், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்த சம்பவம், அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment