டெல்லி : 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. . விஷ்ணு கார்டன் பகுதி ஓரளவு மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். இந்நிலையில் அங்கிருந்த 4 மாடி கட்டடம் திடீரென்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான கட்டத்தின் இடிபாடுகளில் 3 பேர் பலியாகினர். 15 பேருக்கு மேற்பட்டோர்கள் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளில் எட்டு தீயனைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், உள்ளூர் போலீசார், அதிகாரிகள் என ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அருகில் புதிய கட்டடம் கட்ட அதிக ஆழத்திற்கு அஸ்திவாரம் தோண்டியதால் தான் அந்த 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


No comments:
Post a Comment