திக அளவுக்கு சிக்கன் சாப்பிட்டதால் 26 வயது இளைஞருக்கு, பெண்களை போன்று, மார்பகம் வளர்ந்துள்ள சம்பவம் சீனாவில் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது. சீனாவை சேந்த 26 வயது பட்டதாரி இளைஞர் லி. இவர் சமீபத்தில், ஒரு வித்தியாசமான பிரச்சினையுடன் டாக்டரை அணுகியுள்ளார். சமீபகாலமாக லீக்கு மார்பகம் முளைத்துவிட்டதுதான் அந்த பிரச்சினைக்கு காரணம்.
லியின் உடலில் ஹார்மோன் வித்தியாசம் அதிகமாக இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். லியின் உணவு பழக்கம் பற்றி டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது, லி அதிகமாக சிக்கன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்பதும் குறிப்பாக, சிக்கன் விங்ஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக் சாப்பிடும் வழக்கம் உள்ளவர் என்பதும் தெரியவந்தது. பிராய்லர் கோழிகளை வளர்க்கும்போது, அதன் சிறகு பகுதி வழியாகத்தான் வளர்ச்சிக்கான ஊசி போடப்படுகிறது. இந்த கோழிகளை நாம் சாப்பிடும்போது, நமது உடலிலும் செல் மாற்றங்கள் ஏற்படும். சிறுமிகள் சீக்கிரத்திலேயே பூப்பெய்வது, பெண்களுக்கு மார்பகங்கள் பெரிதாக மாறுவது என்பதில் ஆரம்பித்து, புற்றுநோய் தாக்குவது வரை நீளுகிறது பிராய்லர் கோழி அபாயம்.
இதே பிரச்சினையால்தான், லியும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தனித்த அளவுகளில் இருக்க வேண்டிய ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்டோஸ்டெர்ன் ஹார்மோன்கள், மாறுபட்டு இருந்தது தெரியவந்துள்ளது. எனவே, சிக்கன் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்துமாறு அறிவுறுத்திய டாக்டர்கள், பூச்சிமருந்து அடிக்கப்படாத காய்கறி, பழங்களை சாப்பிடுமாறு பரிந்துரைத்துள்ளனர்


No comments:
Post a Comment