தருமபுரியில் தொடங்கிய ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 14 மாவட்ட இளைஞர்கள் குவிந்தனர். ராணுவத்தில் சேர்வதற்குக் கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பைத் தவற விடக்கூடாது என்ற நோக்கில் நூற்றுக்கணக்ககான இளைஞர்கள் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டனர்.
ஜூலை 28 வரை முகாம்
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று இந்த முகாம் தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
14 மாவட்ட இளைஞர்கள்... இந்த முகாமில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் தருமபுரி.... இதில், முதல் நாள் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான தேர்வு முகாம் நடைபெற்றது. முகாமை கொடியசைத்து வைத்து ஆட்சியர் விவேகானந்தன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.லோகநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். புதிய மென்பொருள்
தமிழகம், ஆந்திரம், தெலங்கானாவுக்கான ராணுவத்துக்கான ஆள் சேர்ப்புத் துறை துணைத் தலைவர் சங்கராம் தால்வி தலைமை வகித்துப் பேசியது: ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்களில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். மேலும், ஆள்சேர்ப்பு நடைபெறும் நாள்கள், இடம், தகுதி உள்ளிட்ட விவரங்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் செல்லிடப்பேசிகளில் பதிவிறக்கும் செய்துகொள்ளும் வகையில் ஆர்மி காலிங் என்ற புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். முகாமையொட்டி, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலானோர் முன்தினம் இரவு முதலே விளையாட்டு மைதானத்துக்கு வரத் தொடங்கினர். சரிபார்ப்பு இதில், சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடல்திறன் சோதனை, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், மருத்துவப் பரிசோதனை ஆகியவை நடைபெற்றன. வெளியேற்றம் இதில் பெரும்பாலான இளைஞர்கள் ஓட்டப்பந்தயத் தகுதி தேர்வில் வெளியேறினர். இதே போல், எடை குறைவாகவும், உயரம் குறைவாகவும் வந்த இளைஞர்களை தேர்வுக் குழுவினர் தகுதியிழப்பு செய்தனர். இருப்பிடச் சான்று இல்லை ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்த இருப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் எடுத்து வராமல் இளைஞர்கள் பலர் முகாமிலிருந்து வெளியே அனுப்பப்பட்டனர். நடைப்பயிற்சிக்குத் தடை வருகிற 28-ம் தேதி வரை தேர்வு முகாம் நடைபெறுவதையொட்டி, விளையாட்டு மைதானத்துக்குள் நடைப்பயிற்சி உள்ளிட்டவற்றுக்காக வெளி ஆள்கள் செல்ல தாற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயம் தேர்வுக்கு வரும் இளைஞர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 28 வரை முகாம் நடைபெறுவதால் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்த ராணுவத்தில் சேர இது அரிய வாய்ப்பு என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment