அதிரை வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் [ WFC ] நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி நமதூர் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது .
நேற்று இரண்டு செமி ஃபைனல் ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் மேலநத்தம் MFC அணியினரும், பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினரும் மோதினார்கள். இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல் ஆட்டம் இருந்தது. ஆட்ட முடிவில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தனர். இதன்பின்னர் ட்ரை பிரேக்கர் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை விவேகானந்தா அணியினர் வெற்றி பெற்றனர்.
இரண்டாவது ஆட்டமாக அதிரை WFC அணியினரும், பொதக்குடி அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3-0 என்ற கணக்கில் கோல் அடித்து அதிரை அணியினர் வெற்றிபெற்றனர். இதில் அதிரை அணியின் நட்சித்திர வீரர்கள் ஹைதர் அலி, சைஃபுதீன் ஆகியோரின் அபார ஆட்டத்தால் அதிரை WFC அணி இலகுவாக வெற்றி பெற்றது. முதல் கோலை ஹைதர் அலியும், அடுத்த இரண்டு கோல்களை சைஃபுதீனும் அடித்தனர். இன்றைய வெற்றிய தொடர்ந்து இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.
நிகழ்ச்சிகள் அனைத்தையும் சுலைமான், சேக்தாவூது ஆகியோர் தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயர்களாக வாசு தேவன் மற்றும் ஹாஜா நசுருதீன், லைன் அம்பயர்களாக சுலைமான், அப்ஸர் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.
இன்றைய ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.
இன்று இறுதி ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அதிரை WFC அணியும், பட்டுக்கோட்டை VFC அணியும் மோத இருக்கின்றனர். இன்று சரியாக மாலை 4 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில், இந்த தொடரில் சாதனை நிகழ்த்திய சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.
நன்றி : அதிரைநியூஸ்
செய்தி மற்றும் படங்கள்:கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
No comments:
Post a Comment