சிறப்பாக ஆடிய நமதூர் WFC அணிக்கு விளையாடு வீரர்கள் அனைவரையும் TIYAவின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொகிறோம்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
கூத்தாநல்லூரில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை WFC அணி கலந்துகொண்டு விளையாடியது. இதில் பொதுக்குடி அணியை எதிர்த்து விளையாடியது. முதல் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் போடாமல் ஆடினர். தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் WFC அணியின் நட்சத்திர வீரர் ஹைதர் அலி 1 கோல் அடித்து தனது அணி வெற்றி பெற உதவினார். மேலும் WFC அணியின் கோல் கீப்பர் மஹ்சின் தனது அணிக்கு விழ இருந்த கோல்களை சிறப்பான முறையில் தடுத்து நிறுத்தியதால் WFC அணி இலகுவாக வெற்றிபெற உதவியது. வெற்றி பெற்ற அதிரை WFC அணியினருக்கு பயிற்சியாளர் மற்றும் WFC நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
நன்றி : அதிரைநியூஸ்






No comments:
Post a Comment