ஆர்.கே. நகரில் இடைத்தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். இரண்டு வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டு அங்கு தடை எதுவும் இன்றி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறுவதை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தீப் சக்சேனா, காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெறுவதாக தெரிவித்தார்.
பொது இடங்களில் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. உள்ளூர் டிவி சேனல்களிலும் வாக்குப்பதிவு மையங்களின் செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இரண்டு வாக்குச்சாவடிகளில் பழுதான இயந்திரங்கள் உடனடியாக மாற்றப்பட்டன. அதிகம் பதற்றம் நிறைந்த இரண்டு வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து எஸ்.எம்.எஸ் மூலம் உடனடியாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment