நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரின் மனைவி வீட்டு பணியாளரை தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து தூதரை இந்தியா திரும்ப அழைத்துள்ளது.
நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதராக இருப்பவர் ரவி தபார். இவரது மனைவி சர்மிளா வீட்டு பணியாளரை தாக்கியதுடன், நள்ளிரவில் வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதனால் 20 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து வெலிங்டன் நகரில் உள்ள காவல்நிலையத்தில் அந்த பணியாளர் புகார் செய்துள்ளார். அவரை போலீசார் அழைத்துச் சென்று முகாமில் தங்க வைத்துள்ளனர். பல நாட்கள் அங்கு தங்கி இருந்த அவர், மே மாதம் இந்தியா திரும்பி உள்ளார்.
இந்நிலையில், இந்திய தூதரின் மனைவி மீது கூறப்பட்ட புகார் உண்மை என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நியூசிலாந்து அரசு இந்தியாவிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து ரவி தபாரை இந்தியா திரும்ப அழைத்துள்ளது. ரவி தபார் குடும்பத்துடன் இந்தியா புறப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
No comments:
Post a Comment