வேலூர் மாவட்டம், ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த ஷாஜகான் மகன் சகில் அகமது என்ற 26 வயது இளைஞரை பள்ளிக்கொண்டா காவல்நிலைய ஆய்வாளர் மார்டின் ஒரு வழக்கு தொடர்பாக காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
அவரை அடித்து உதைத்து விசாரணை செய்ய உடல்நிலை பாதிக்கப்பட்டான். இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு இஸ்லாமிய இயக்கம் ஆம்பூர் தாலுக்கா அலுவலகம் முன்பு அகமதுவை வெளியே விடவேண்டும் என கேட்டு போராட்டம் நடத்தியது.
அதன்பின் அந்த இளைஞரை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை பலனளிக்காமல் 26ந் தேதி மாலை 6 மணிக்கு இறந்துள்ளான். இறந்தவன் உடலை வாங்க குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் மறுத்துவிட்டனர்.
காவல்நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியதால் தான் அவன் இறந்தான். அதனால் கொலை வழக்காக இந்த வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும், இன்ஸ்பெக்டரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்லாமிய இயக்கங்கள் எழுப்பியுள்ளன. இதனால் ஆம்பூரில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே பதட்டம் நிலவுகிறது. இதனால் இன்று காலை முதல் ஆம்பூரில் 5 டி.எஸ்.பிகள் தலைமையில் ஐநூறுக்கும் அதிகமான போலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் சqரக காவல்துறை தலைவர் தமிழ்ச்சந்திரன், எஸ்.பி செந்தில்குமாரி ஆம்பூர்க்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment