தற்போது உடல் பருமன் மிகவும் பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த உடல் பருமனால் பலவித நோய்கள் அழையா விருந்தாளியாக வருகின்றன. அதில் இதய நோய், மலட்டுத்தன்மை, நீரிழிவு மற்றம் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல மக்களுக்கு தொந்தரவு தரும் நோய்கள் குறிப்பிடத்தக்கவை.
மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!!
நீங்கள் மிகவும் குண்டாக இருக்கிறீர்களா? கண்ணாடியில் உங்கள் முழு உருவத்தைக் காணும் போது கஷ்டப்படுகிறீர்களா? ஒல்லியாக இருப்பவர்களைப் பார்த்து பொறாமை கொள்கிறீர்களா? கவலையை விடுங்கள். எப்படி முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டுமோ, அதேப் போல் உங்கள் உடலில் எப்படி உணவுகளால் கொழுப்புக்கள் சேர்ந்ததோ, அதேப் போல் உணவுகளாலேயே கொழுப்புக்களை கரைக்கலாம்
நைட் தூங்கும் போது இத குடிச்சா தொப்பை குறையுமாம்...!
அதுமட்டுமின்றி, அந்த உணவுகளின் மூலமே நல்ல அழகான உடலமைப்பையும் பெறலாம். இங்கு உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை உடைத்தெறியும் சில உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இவற்றை உட்கொள்வதோடு, அன்றாடம் உடற்பயிற்சியையும் மேற்கொண்டு, சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்தால், விரைவில் உடல் பருமனைக் குறைக்கலாம்.
டயட்டில் இல்லாமல் உடல் எடையை குறைக்க சூப்பரான 25 வழிகள்!!!
அஸ்பாரகஸ் அஸ்பாரகஸில் அஸ்பாரகைன் என்னும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டைத் தூண்டும் பொருள் உள்ளது. அஸ்பாரகைனானது கொழுப்புக்களை ஒன்று சேர்க்கும் ஆக்சாலிக் ஆசிட்டுகளை உடைத்தெறிந்து, உடல் பருமன் குறைய உதவியாக இருக்கும்.
முட்டைக்கோஸ்
முட்டைக்கோஸ் சாப்பிட்டு வந்தால், இடுப்பைச் சுற்றி சேர்ந்துள்ள கொழுப்புக்கள் கரையும். அதிலும் இதில் அயோடின் மற்றும் சல்பர் போன்ற கொழுப்புக்களை கரைக்கும் சத்துக்கள் அதிகம் உள்ளது.
முழு தானியங்கள்
முழு தானியங்களான ஓட்ஸ், முழு தானிய பிரட், கைக்குத்தல் அரிசி போன்றவை அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவும் உணவுப் பொருட்கள். மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை வழங்கி, கொழுப்புக்களை கரைக்க உதவும்
பருப்பு வகைகள்
பருப்புக்களில் இரும்புச்சத்து அகிதம் உள்ளது. அதிலும் இதில் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்தில் 40 சதவீதம் உள்ளது. எனவே அன்றாடம் பருப்புக்களை உணவில் சேர்த்து, கொழுப்புக்களை கரைத்து, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களைப் பெறுங்கள்.
கேரட்
கேரட்டில் உள்ள கரோட்டின், கண்களுக்கு மட்டும் நல்லதல்ல. அவை உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடலில் இருந்து வெளியேற்றும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, சிலிகான் மற்றும் சல்பர் அதிகம் உள்ளது. இவை கொழுப்புக்களை தளரச் செய்து கரைத்து உடலில் இருந்து வெளியேற்றும். அதுமட்டுமல்லாமல், வெள்ளரிக்காய் உடலில் உள்ள யூரிக் ஆசிட்டுகளின் அளவைக் குறைக்கும்.
க்ரீன் டீ
தினமும் 2 கப் க்ரீன் டீ குடிப்பதன் மூலம், உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்களை கரைக்கலாம். மேலும் க்ரீன் டீ குடித்து வந்தால், சருமம் இளமையோடும் பொலிவோடும் காணப்படும்.
பால் பொருட்கள்
குறைவான கொழுப்புள்ள பால் பொருட்களில் தசைகளை வளரச் செய்யும் புரோட்டீன்களும், கொழுப்புக்களை கரைக்கும் சக்தியும் உள்ளது. மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளதால், எலும்புகளும் வலிமையோடு இருக்கும்.
கொழுப்பு மற்றும் தோல் நீக்கப்பட்ட சிக்கன்
கொழுப்பு மற்றும் தோல் நீக்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவதன் மூலமும் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புக்களை கரைக்கலாம்.
No comments:
Post a Comment