பிறரை பழிவாங்க இணையதளத்தில் வெளியிடப்படும் ஆபாச படங்களை முடக்க உள்ளது கூகுள். காதலர்கள் பிரிந்துவிட்டால் அவர்கள் ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்களை காதலன் இணையதளத்தில் வெளியிட்டு பழிவாங்குகிறார். மேலும் பெண்களை பழிவாங்கும் எண்ணத்தில் அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பலர் இணையதளத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள்.
ரிவெஞ்ச் போர்ன் எனப்படும் இத்தகைய ஆபாசப்படங்களால் பல பெண்களுக்கு பிரச்சனையாக உள்ளது. அதனால் ரிவெஞ்ச் போர்ன் படங்களை முடக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கு ஏராளமானோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கூகுள் அதிகாரி அமித் சிங்கால் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது, பழிவாங்க ஆபாச படங்களை இணையதளத்தில் போட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் அதை முடக்கக் கோரி விண்ணப்பம் அளிக்கும் வசதியை கூகுள் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. விண்ணப்பம் அளித்தால் இணையதளத்தில் அவர்களின் ஆபாச படம் இருந்தாலும் அதை தேடினாலும் யாரும் பார்க்க முடியாதபடி செய்துவிடுவோம். அதாவது சர்ச் ரிசல்ட்டில் அந்த புகைப்படங்கள் வராது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment