பெரிய ஜும்மா பள்ளியில் வழக்கம்போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் தினமும் தயாரிக்கப்படும் நோன்பு கஞ்சியை இப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள், சிறுவர் சிறுமிகள் ஆர்வமாக வந்து வாங்கிச் செல்கின்றனர். இதற்காக பள்ளியின் நிர்வாகம் சார்பில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூலம் தினமும் அஸர் தொழுகைக்குப்பின் நோன்பு கஞ்சி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் பள்ளியில் இஃப்தார் நிகழ்ச்சியும், இரவில் தராவீஹ் தொழுகை நடைபெறுகிறது. இதில் அப்பகுதியினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்.
இன்று மாலை பெரிய ஜும்மாப் பள்ளி இஃப்தார் கமிட்டியின் சார்பாக பள்ளி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் பெரிய ஜும்மா பள்ளி நிர்வாகிகள், இஃப்தார் கமிட்டியினர் அன்புடன் வரவேற்று உபசரித்தனர். இன்றைய இஃப்தார் நிகழ்ச்சியில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment