புதுடெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை தடுத்தால் அனைத்து மசூதிகளும் கோயில்களாக மாறும் என விஷ்வ இந்து பர்ஷத் தலைவர் அசோக் சிங்கால் எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்பது ராமரின் விருப்பம் என்றார். இதனை யாரால் எதிர்க்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர் ராமர் கோவில் கட்டுவது குறித்து முடிவு எடுக்கவிடாமல் தடுத்தால் அனைத்து மசூதிகளும் கோயில்களாக மாறும் என்றார்.
பாஜக ஆட்சியிலேயே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகராஜ் அண்மையில் கூறியிருந்தார். இல்லையெல் ராமர் கோவில் கட்டுவதை தடுத்தால் அனைத்து மசூதிகளும் கோவில்களாக அசோக் சிங்கால் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment