நியூயார்க்: அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலின் போது சந்தேகத்தின் போரில் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட அப்பாவி அரேபியர்கள், இஸ்லாமியர்கள் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானங்கள் மூலம் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்கி அழித்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஏராளமான அப்பாவி அரேபியர்கள், இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.
நீண்ட விசாரணைகளுக்குப் பின்னரே இவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்த பாதிக்கப்பட்டோர், முஸ்லிம்கள், அரேபியர்கள், தென்னாசிய நாட்டவர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்; பின்னர் 23 மணிநேரம் தொடர் சித்திரவதை செய்தனர். உறங்கவே விடாமல் உடைகளைக் களைந்தும் பல்வேறு வகையிலும் சித்ரவதை செய்தனர் என்று முறையிட்டிருந்தனர். ஆனால் இந்த வழக்கு 2013ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதிகள் ரோஸ்மரி பூலெர், ரிச்சர்ட் வெஸ்லி, அரேபியர், முஸ்லிம்கள் என தோற்றமளித்த காரணத்தாலேயே இத்தகைய சித்ரவதைகளை செய்வதற்கு அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை என்று தீர்ப்பளித்தனர். அத்துடன் அப்போதைய புஷ் ஆட்சிக்கால அட்டர்னி ஜெனரல் ஜோன் ஆஷ்க்ராப்ட், எஃப்.பி.ஐ. இயக்குநர் ராபர்ட் முல்லர் உள்ளிட்டோர் மீது பாதிக்கப்பட்ட 9/11 கைதிகள் வழக்கு தொடர முடியும் எனவும் தீர்ப்பளித்தனர்.
No comments:
Post a Comment