இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்ரா தீவின் மேடான் என்ற பகுதியில் ராணுவ விமானம் வீடு, மற்றும் ஹோட்டல் மீது விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 113பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. மேடனில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து ‘ஹெர்குலஸ் சி 130'என்ற விமானம் நாடுனா தீவுகளுக்கு புறப்படது. இந்த விமானத்தில் 12 விமான ஊழியர்களும், 101 பயணிகளும் பயணித்துள்ளனர்.
இந்த விமானம் சுமத்ரா அருகே உள்ள மேடன் நகர குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. கடைசியாக கிடைத்த தகவலின் படி 113 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக மீட்புப்படையைச் சேர்ந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இதுவரை 49 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், விமானம் எரிந்து போனதால் சடலங்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அஞ்சப்படுகிறது. யாராவது உயிருடன் இருக்கலாம் என்று தேடி வருவதாகவும் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி தகவல் கிடைக்கவில்லை எனவும் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment