வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம்த்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த மானியத் தொகைக்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற தகவல் வெளியானது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி தொடர்பான சட்டதிருத்தத்தில், ஒரு தனி நபர், தான் பெறக்கூடிய மானியங்கள், ஊக்கத்தொகை போன்ற பலன்களும் அவரது வருமான கணக்கில் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நிதி சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் தனி நபர் பெற்றுவரும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் அல்லது இதர நலத்திட்டங்கள் தொடர்பான மானியங்களுக்கு பொருந்தாது.
இது வணிகம் மற்றும் தொழில் தொடர்பாக பெறப்படும் லாபங்கள், இதர வகையில் வரும் வருமானங்கள் தான் இதில் சேரும்.
எனவே சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம், நலத்திட்டங்கள் வாயிலாக பெறக்கூடிய மானியங்களுக்கு வருமான வரி கிடையாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment