அகமதாபாத்: முஸ்லீம் என்பதால் வேலை மறுக்கப்பட்ட எம்.பி.ஏ. பட்டதாரியான ஜீஷான் கானுக்கு பிரதமர் மோடிக்கு நெருக்கமான அதானியின் நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. மும்பையைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனம் எம்.பி.ஏ. பட்டதாரியான ஜீஷான் கான்(22) ஒரு முஸ்லீம் என்பதால் அவருக்கு வேலை அளிக்க மறுத்தது. மும்பையில் படித்த ஜீஷான் தனக்கு மதத்தின் அடிப்படையில் வேலை மறுக்கப்பட்டது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அந்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜீஷானுக்கு அதானி குழுமத்தில் வேலை கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு மும்பை நிறுவனம் வேலை அளிக்க மறுத்த பிறகு பல நிறுவனங்கள் வேலை அளிக்க முன்வந்தன. என் நிலைமையை நினைத்து வருந்துவதாக கூறி பலர் எனக்கு இமெயில் அனுப்பினர். எனக்கு வேலை அளித்து வந்த இமெயில்களில் அதானி குழும வேலை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தியாவில் உள்ள பெரிய உள்கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான அதானி நிறுவனத்தில் சேர்வது என முடிவு செய்து அகமதாபாத் வந்துள்ளேன் என்றார்.மதம், சாதி, சமூகம் இதை எல்லாம் தாண்டி திறமையை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஜீஷான் திறமையானவர் என்பதை கண்டுபிடித்து அவருக்கு வேலை அளித்துள்ளோம் என்று அதானியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment