Latest News

புது பெண்ணை ஆசைக்கு இணங்க அழைத்த போலி சாமியாரை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்


பெங்களூரு அருகே திருமணமான புது பெண்ணை ஆசைக்கு இணங்க அழைத்த போலி சாமியாரை அப்பகுதி மக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு கைது செய்தனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள தங்க சுரங்கம் அமைந்திருந்த பழைய நகரம் கடாக். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தன்ைன சாமியார் என்று அறிவித்துக் கொண்டு வாலிபர் ஒருவர் இங்கு வந்து தங்கியுள்ளார். அவரை  சித்தப்பாஜி என்று அப்பகுதி மக்கள் அழைத்து வணங்கி வந்துள்ளனர். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அவ்வப்போது ஆசிகள் வழங்கி வந்த சித்தப்பாஜி படிப்படியாக வளர்ச்சி அடைந்தார். அவருக்கு ஏராளமான சீடர்களும் அங்கு உருவாகினர். இதையடுத்து அங்கு அவர் ஒரு சிறிய ஆசிரமத்தை அமைத்து மக்களுக்கு ஆசி வழங்கி வந்தார். இந்த சூழலில்தான் சித்தப்பாஜிக்கு விபரீத ஆசை எழுந்துள்ளது. தன்னை நாடி வரும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி தனது இச்சைக்கு இணங்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அவ்வப்போது இவரை தேடி வரும் பெண்களிடம் தன்னை தழுவினால் கடவுளின் ஆசி கிடைக்கும் என கூறி அழகான பெண்களை அணைப்பது போல் அணைத்து தனது லீலைகளை தொடங்கியுள்ளார். ஒரு சிலர் இதை இயல்பாக எடுத்து கொண்டனர். ஒருசில பெண்கள் இந்த சாமியாருக்கு அப்பகுதியில் காணப்படும் செல்வாக்கை கண்டு பயந்து வெளியில் சொல்ல தயங்கினர்.

இவரது பக்தையான பெண் ஒருவருக்கு அண்மையில் திருமணம் நடந்துள்ளது. இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு அந்த பெண் இவரிடம் ஆசி பெற வந்துள்ளார். ஆனால் சாமியாரோ தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியுள்ளார். இதற்காக அவர் தன்னுடன் இணங்கினால் பிறக்கும் குழந்தைக்கு கடவுளின் ஆசி கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். சாமியாரின் விபரீத புத்தியை கண்ட பெண் அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பின்னர் அந்த பெண் கூறிய தகவல்களை அப்பகுதியினர் நம்ப மறுத்தனர். தனது குடும்பத்தாரிடம் சொல்லி அப்பெண் அழுதுள்ளார். இதற்குள் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் மத்தியில் இந்த தகவல் பரவியது. இதை கேட்டு ஆத்திரம் அடைந்த ஏராளமான அப்பகுதி இளைஞர்கள் நேற்று காலை ஆசிரமத்துக்குள் புகுந்தனர். இதை கண்டு சாமியாரின் ஆதரவாளர்கள் நழுவி ஓட்டம் பிடித்தனர்.

பின்னர் சித்தப்பாஜியை நடுத்தெருவுக்கு இழுத்து வந்து உறவினர்களும், இளைஞர்களும் சேர்ந்து அடித்து உதைத்தனர். இதில் கும்பலாக தாக்கியதில் படுகாயமடைந்து அவர் கவலைக்கிடமாகும் அபாயம் ஏற்பட்டது. இதை கண்ட சிலர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதற்குள் அந்த கூட்டம் சாமியாரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பெண்களை ஆசைக்கு அழைப்பாயா என்று கூறியே வெளுத்தனர். இதில் சாமியார் மயங்கினார். பின்னர் அங்கு வந்த போலீசார் கூட்டத்தை சமாதானப்படுத்தி சாமியாரை கைது செய்து கொண்டு சென்றனர். இதுகுறித்து கர்நாடகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.