எங்கள் அம்மா வந்தாச்சு. இன்றும், நாளையும் எங்களுக்கு திருவிழா தான் என அதிமுகவினர் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நாளை தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் அவர் சுமார் 7 மாதங்கள் கழித்து இன்று முதன்முறையாக தனது போயஸ் கார்டன் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
ராஜ்பவன் சென்ற அவர் ஆளுநர் ரோசையாவை சந்தித்து பேசினார். நாளை அவர், 28 அமைச்சர்களுடன் பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில் சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது. திரும்பும் பக்கம் எல்லாம் அதிமுகவினராக உள்ளனர். மேலும் ஜெயலலிதாவை வாழ்த்தி நகர் முழுவதும் பேனர்கள் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுகையில்,
எங்கள் அம்மா வந்தாச்சு. இன்றும், நாளையும் எங்களுக்கு திருவிழா தான். நாளை அவர் முதல்வராகிவிடுவார். தமிழகத்தில் பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. அவர் அவற்றை எல்லாம் முடித்து வைப்பார். எங்கள் வாழ்வின் மகிழ்ச்சியான நாள் இது தான் என்று தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment