நெல்லையில் பூ விற்கும் தொழிலாளியின் மகள் முத்துவேணி பத்தாம் வகுப்பு தேர்வு மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார். நெல்லையைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். தெருத் தெருவாக பூ விற்கும் தொழிலாளி. அவரது மனைவி பார்வதி. அவர்களின் இளைய மகள் முத்துவேணி. அவர் நெல்லை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதில் முத்துவேணி 500க்கு 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்துள்ளார். அவர் சமூக அறிவியல் பாடத்தில் 99 மதிப்பெண்ணும் பிற பாடங்களில் 100 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். அரசு உதவி பெறும் ஜோசப் பள்ளி மாணவி ஒருவர் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது இதுவே முதல் முறை ஆகும். இது குறித்து முத்துவேணி கூறுகையில், மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் வீட்டில் டிவி இருந்தும் நான் படிப்பதற்காக ஓராண்டாக கேபிள் இணைப்பை துண்டித்துவிட்டார்கள். வறுமையிலும் என் அக்கா இசக்கியம்மாள் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் என்றார்.
No comments:
Post a Comment