தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்புகிற வெட்டி வேலையை விட்டுவிட்டு அவரிடம் இருந்து உழைப்பை, அரசியலை கற்றுக் கொள்ளுங்கள் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கு தி.மு.க. முன்னாள் எம்.பி. தாமரைச்செல்வன் பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து கேள்விகள் எழுப்பி மு.க.ஸ்டாலின் ஒரு நீண்ட கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு திடீரென அன்புமணி ராமதாஸ் ஒரு கடிதம் அனுப்பி வைத்தார்.
அக்கடிதத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் ஆட்சியையும் மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் அன்புமணி. இதற்கு தருமபுரி தொகுதி முன்னாள் எம்..பி. தாமரைச்செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாமரைச்செல்வன் கூறியிருப்பதாவது: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதற்கு இதுவரை முதலமைச்சரிடமிருந்து பதில் வரவில்லை. ஆனால் அழைப்பே இல்லாமல் திருமணத்திற்கு ஆஜராகியிருக்கும் டாக்டர் அன்புமணி குறிப்பாக திராவிட இயக்கம் வளர்த்த தொட்டிலில் வளர்ந்து டாக்டர் பட்டம் பெற்ற அன்புமணி இன்றைக்கு பதில் சொல்கிறேன் என்ற போர்வையில் திக்குத் தெரியாமல் பாய்ந்திருக்கிறார். டாக்டர் அன்புமணிக்கு பழைய அரசியல் தெரியாமல் போயிருக்கலாம். குறைந்த பட்சம் அவர் தனது தந்தையிடமாவது கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். "தேர்தல் திருடர்கள் பாதை" என்றும் "தேர்தலை புறக்கணிப்போம்" என்று கூறித்தானே இந்த சமுதாயத்தை வளைத்துப் போட நினைத்தீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி துவங்கிய பிறகு "என் உயிர்மூச்சு உள்ளவரை நானோ அல்லது என் வாரிசுகளோ எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவிக்கு போட்டியிடமாட்டோம்" என்றுதானே உரக்கக் குரல் எழுப்பி நலிவடைந்து கிடந்த வன்னியர் சமுதாயத்தை ஏமாற்றினீர்கள்? ஆனால் எங்கள் தலைவர் கருணாநிதி அப்படியல்ல. வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு கிடைக்காமல் தவித்த போது கை தூக்கி விட தலைவர் கருணாநிதிதான்... அன்று கூட அவர் தன்னிச்சையாக இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கலாம்.
No comments:
Post a Comment