சமூக சேவகர் அன்னா ஹஸாரே பயன்படுத்தி வந்த ஸ்கார்ப்பியோ கார் ரூ. 9.11 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது. கடந்த எட்டு வருடமாக இந்தக் காரை அன்னா பயன்படுத்தி வந்தார். பல்வேறு முக்கியமான போராட்டங்களுக்கு இந்தக் காரில்தான் அவர் பயணித்துள்ளார். இந்தக் கார் இன்று மகாராஷ்டிர மாநிலம் ராலேகான் சித்தி கிராமத்தில் ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ. 9.11 லட்சத்திற்கு கார் இறுதியாக ஏலம் போனது.
அன்னாவின் நெருங்கிய கூட்டாளியான பிரவீன் என்கிற அதுல் லொகண்டே என்பவர் இந்தக் காரை ஏலத்தில் எடுத்தார். இவர் அகமது நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த ஏலத்தில் லொகண்டே உள்பட 15 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். இந்தக் காருக்குப் பதில் புதிதாக இன்னோவா கார் அன்னாவுக்காக வாங்கப்படவுள்ளதாக தெரிகிறது. 80 வயதான அன்னாவுக்கு முதுகு வலி இருப்பதால், அவருக்குப் புதிய வசதியான கார் வாங்க வேண்டியது அவசியமாகியு்ள்ளதாக அவரது உதவியாளர் அன்சாரி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment