திருப்பூர்: மோடியின் 13 முறை வெளிநாட்டு பயணமே ஓராண்டு கால பாஜக ஆட்சியில் சாதனை என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். குழந்தைதொழிலாளர் மசோதாவில் திருத்தம் செய்ய ஆர்.எஸ்.எஸ் ஆதரவு சங்கமே எதிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் முடிவுக்கு பாரதிய மஸ்தூர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது காங்கிரஸ். சட்டதிருத்தம் மூலம் ஆர்.எஸ்.எஸ் சின் குலக்கல்வியை அறிமுகப்படுத்த முயற்சியா என ஈ.வி.கே.எஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பெரியார்,காமராஜர் எதிர்த்த குலக்கல்வியை அறிமுகப்படுத்த மோடி அரசு முயற்சி என புகார் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் மோடி அரசின் சட்டத்திருத்தம் இல்லை என இளங்கோவன் கூறியுள்ளார். ஆளுங்கட்சியான அதிமுக மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு ஒரு பக்கம் கூறி வருகிறது. அரசு துறை ஊழியர் சங்கங்களே ஆட்சி மீது குற்றம்சாட்டும் அவலநிலையே அதிமுக சாதனை என அவர் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில் ஐ.என்.டி.சி யு மாவட்ட மாநாட்டுக்கு பின் செய்தியாளர்களிடம் இளங்கோவன் தகவல் கூறுயுள்ளார்.
No comments:
Post a Comment