ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீது இன்று காலை 11 மணிக்கு தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வழங்கினார். சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான ஜெயலலிதாவை முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் ஐகோர்ட்டு தெரிவித்து உள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பி வழக்கில் இருந்து விடுதலையானதை தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இன்று மாலை எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று 3 மணிக்கு நடைபெறுகிறது. அதில் முதல்-அமைச்சராக. ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று பதவி விலகுகிறார். ஜெயலலிதா 17-ந்தேதி முதல்வராக பதவி ஏற்கிறார். என தகவல் வெளியாகி உள்ளது இந்த நிலையில் இன்று பன்னீர் செல்வம, சபாநாயகர், துணை சபாநாயகர், மற்றும் மூத்த அமைச்சர்கள் ஜெயலாலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
No comments:
Post a Comment