அதிரை M.M.S குடும்பத்தை சேர்ந்தவர் M.M.S. பஷீர் அஹமது. இவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசனின் நன்மதிப்பை பெற்றவர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கட்சி தலைமையகத்தால் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து தெரிவித்து இருந்தார். மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட M.M.S. பஷீர் அஹமது அவர்களுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு நாளை[ 24-04-2015 ] சென்னையில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக சென்னை சென்ற M.M.S. குடும்பத்தினர் மரியாதை நிமித்தமாக ஜிகே வாசன் இல்லத்தில், ஜிஆர் மூப்பனார் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். சந்திப்பின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. என் ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment