தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளும், தனியார் மருத்துவ கல்லூரிகளும், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டை விட அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது.
பிளஸ்2 ரிசல்ட் மே 7 ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவப் படிப்புக்களுக்கு, பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் 60 முதல் 80 லட்சம் வரை வாங்கிக் கொண்டு மாணவர்கள் சேர்க்கை நடத்துகிறது.
பணக்கார பெற்றோர்கள் கவுரவத்திற்காக, படிக்கும் திறன் குறைந்த தங்களது பிள்ளைகளை சேர்க்க கொடுக்கும் விலை, எதிர்காலத்தில் மக்களின் உயிருக்கு வைக்கும் உலை ஆகும்.
இந்திய மருத்துவ கவுன்சில் (MEDICAL COUNSIL OF INDIA) இந்த மனித அழிவு அபாயத்தை அறிந்து செயல்பட வேண்டும். மோசமான மருத்துவ வியாபாரத்தை தடுத்திட பெற்றோர்களே முன்வாருங்கள், உங்கள் தற்பெருமைக்காக மருத்துவ படிப்பில் தகுதியற்ற மாணவர்களை பணம் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக சேர்ப்பதை தவிருங்கள்.
இன்று பல மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புக்களுக்கு தகுதியும், திறமையும், அற்ற மருத்துவர்களே காரணம் என்று ஆய்வுகள் சொல்வதால் அடுத்தவரின் விலை மதிப்பற்ற உயிரோடு விளையாடுவதை தவிர்க்க தங்கள் பிள்ளைகளின் திறமைக்கேற்ற படிப்பை தேர்ந்தெடுக்க வேண்டும் என பெற்றோர்களை வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment